News September 26, 2025
கிருஷ்ணகிரி: விஜய் வரும் தேதியில் மாற்றம்

தவெக தலைவர் விஜய் கிருஷ்ணகிரியில் நவ.1ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.08இல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT
Similar News
News October 17, 2025
சிங்காரப்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நாளை அக்-18ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை, சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் இலவசம் முழு உடல் பரிசோதனை & சிகிச்சைகள் நடைபெற உள்ளது. சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துளார்.
News October 16, 2025
கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 16, 2025
கிருஷ்ணகிரி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*