News January 9, 2026
கிருஷ்ணகிரி வாக்காளர்கள் கவனத்திற்கு…

கிருஷ்ணகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 3, 2026
கிருஷ்ணகிரி: பாட்டியை ஜேசிபி ஏற்றி கொன்ற கொடூரன்!

ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ராணி. இவர் தன்னுடைய பேரன் சிரஞ்சீவிக்கு (28) சில நாட்களுக்கு முன் ஜேசிபி இயந்திரம் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் வண்டிக்கான கடன் தவணையை ராணி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, ஜேசிபி இயந்திரத்தாலேயே தனது பாட்டியைத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.
News February 3, 2026
ஓசூர் அருகே சோழர் கால கோயில் கண்டுபிடிப்பு

ஓசூர் அடுத்துள்ள பெகிலி என்ற ஊரில் மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையிலும், மரங்களால் சூழப்பட்ட நிலையிலும் சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிற்காலச் சோழர் கால கோயில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கோயிலை காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.