News September 13, 2024
கிருஷ்ணகிரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News July 6, 2025
கிருஷ்ணகிரி: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு (04343-236189) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962466>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள், பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
கிருஷ்ணகிரியில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜய குமார் கூறியுள்ளார். சென்னையை அடுத்து இந்த சேவை கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பாஸ்போர்ட் சேவையை பெறலாம் என தெரிவித்துள்ளார். *பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அருமையான திட்டம். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*