News July 11, 2025
கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய அதிகாரி அதிரடி கைது

கிருஷ்ணகிரி, சூளகிரியை அடுத்த இனகபீரணப்பள்ளியை சோ்ந்த கதிரப்பாவிடம் உயா் அழுத்த மின் கம்பத்தை அமைக்க அத்திமுகம் உதவி பொறியாளா் உதயகுமார் ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, நேற்று காலை கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின்படி கதிரப்பா ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து, உதயகுமார் கைது செய்யப்பட்டார். உங்களிடம் லஞ்சம் வாங்கினால் 04343- 292275-க்கு கால் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
கிருஷ்ணகிரி: ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இது குறித்து தெரிந்து கொள்ள கிரு., மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தை(04343236808) தொடர்பு கொள்ளுங்கள். <<17028219>>தொடர்ச்சி.<<>> ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் விபத்து காப்பீடு விவரங்கள்

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶<
News July 11, 2025
புகையிலை பெருட்கள் கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடியில் போலீசார் நேற்று (ஜூலை 9) வாகன சோதனை செய்தபோது, ரூ.1,42,656 மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2,015 மதிப்பிலான மதுபானம் கண்டறியப்பட்டது. அவற்றை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.