News August 27, 2025
கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 3, 2026
ஓசூர் திமுகவில் பரபரப்பு – MLA, மேயர் விருப்பமனு!

ஒசூா் தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று (மார்ச்.1) விருப்ப மனு அளித்தார். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளா் சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக தற்போதைய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் விருப்ப மனு அளித்த நிலையில் மேயர் சத்யாவும் மனு அளித்திருப்பது ஓசூர் பகுதி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News March 3, 2026
ஓசூரில் இன்று உள்ளூர் விடுமுறை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. “மறக்காம ஷேர் பண்ணுங்க”
News March 3, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


