News November 1, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
கிருஷ்ணகிரி: கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. போதுவாக அனுமன் கோயில்களிலும் வடைமாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுவார்கள். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது கஷ்டங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 1, 2025
கிருஷ்ணகிரி:நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ( நவம்பர் 1 ) இன்று காலை 9 முதல் 4 மணி வரை 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் இம் மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


