News September 9, 2025

கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

கிருஷ்ணகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ <>முகாமில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

Similar News

News September 9, 2025

கிருஷ்ணகிரியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தரவுள்ளார். முதல்வர் வருகையொட்டி போலீசார் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட, 8 மாவட்டங்களிலிருந்து, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.

News September 9, 2025

BREAKING: கிருஷ்ணகிரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

image

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், நவ.1 கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

News September 9, 2025

ஓசூருக்கு வரும் முதலமைச்சர்: 2,000 போலீசார் பாதுகாப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு, வருகிற செப்.11. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். 2 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் அவர், முதலமைச்சர் வருகையையொட்டி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!