News April 3, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தம்பதியரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation .nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
Similar News
News December 29, 2025
கிருஷ்ணகிரி: ஹோட்டலில் தரமற்ற உணவா?

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!
News December 29, 2025
கிருஷ்ணகிரி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள இனி வங்கிக்கு செல்ல வேண்டாம். போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 29, 2025
கிருஷ்ணகிரி: பெண்ணை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது!

காவேரிப்பட்டணம் அருகே மேட்டுபள்ளத்தை சேர்ந்த விவசாயி சரசு (65) மற்றும் மாதேசன் (56) ஆகியோருக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (டிச.28) ஏற்பட்ட தகராறில் சரசுவை மதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சரமாரியாக ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.


