News April 14, 2024

கிருஷ்ணகிரி: யானை மிதித்து பலி

image

தளி அருகே உள்ள சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா(65) என்பவர் நேற்று மாலை விவசாய நிலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இன்று காலை தேடிச்சென்ற போது அவரை காட்டு யானை மிதித்து இறந்துள்ளது தெரியவந்தது. இதனால் கிராம மக்கள் கொந்தளித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த யானை சுற்றி வந்த நிலையில் வனத்துறையினர் கண்டுக்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. 

Similar News

News July 10, 2025

கிருஷ்ணகிரியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 2/2

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

கிருஷ்ணகிரியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 1/1

image

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT சர்வே குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04343239400) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க <<17015679>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

6 லட்சம் மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழா

image

கிருஷ்ணகிரி “இந்தியாவின் மாம்பழத் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3,00,000 டன்களுக்கும் அதிகமான மாம்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதும் இதன் தனிச் சிறப்பு. இந்த விழாவில் 6 இலட்சத்திற்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். ஷேர்!

error: Content is protected !!