News April 6, 2025
கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி மறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கல்வி நிறுவனம் பாரத் கல்வி அறக்கட்டளை தலைவரும் கிருஷ்ணகிரி முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான C.பெருமாள் இன்று காலை 5.00 மணி அளவில் இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
கிருஷ்ணகிரி: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

கிருஷ்ணகிரி பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <<-1>>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க மக்களே!
News September 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று மொத்தம் 203.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓசூர் பகுதியில் அதிகபட்சமாக 43.0 மி.மீ மழை பெய்துள்ளது. இது தவிர, கிருஷ்ணகிரி அணை (கே.ஆர்.பி அணை) பகுதியில் 26.80 மி.மீ மழையும், போச்சம்பள்ளியில் 25.10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
News September 18, 2025
கிருஷ்ணகிரி கிராம மக்களுக்கு உதவிய இயக்குனர் பா.ரஞ்சித்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி கிராமத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது தண்டகாரண்யம் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பழங்குடி மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் 8 கி.மீ. தார் சாலை அமைத்து கொடுத்தார். சாலை வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்த மக்கள், ரஞ்சித்தின் இந்த செயலை பெரிதும் பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.