News March 19, 2024
கிருஷ்ணகிரி: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

வாடமங்கலம் கிராமத்தைச் கோவிந்தசாமி என்பவரின் மகன் சந்தோஷ்குமார் தனியார் பள்ளியில் 11-ம்வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து வீட்டின் மீது விழுந்தது. பந்தை எடுக்க அங்கிருந்த குழாய் ஐ பிடித்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 6, 2025
வாங்கிய பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 9445000396 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News September 6, 2025
கிருஷ்ணகிரி மக்களே விலை தெரிஞ்சிக்கோங்க

கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் இன்றைய (செ.6) காய்கறி விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.14, உருளை ரூ.28, வெங்காயம் ரூ.20, மிளகாய் ரூ.45, கத்திரி ரூ.22, வெண்டைக்காய் ரூ.16, முருங்கை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.26, சுரைக்காய் ரூ.15, புடலங்காய் ரூ.24, பாகற்காய் ரூ.30, தேங்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.14, பீன்ஸ் ரூ.50, அவரை ரூ.35, கேரட் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.
News September 6, 2025
கிருஷ்ணகிரி: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

கிருஷ்ணகிரி மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 5 வேலை வாய்ப்புகள்:
▶️சீருடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)