News August 6, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட துணை அமைப்பாளர் காலமானார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக இருந்த குட்டப்பள்ளியை சேர்ந்த ஆர். சிவகுமார் இன்று காலை 7 மணி அளவில் திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவால் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். அவரது கட்சி பணி மற்றும் சமூக சேவைகள் குறித்து பலர் கூறி வருகின்றனர். மாவட்ட திமுகவினர் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
ஓசூரில் இன்று உள்ளூர் விடுமுறை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. “மறக்காம ஷேர் பண்ணுங்க”
News March 3, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
கிருஷ்ணகிரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


