News November 11, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை, உங்கள் போனிற்கு குறைந்த வட்டியில் லோன் வழங்குவதாக SMS வந்தால், அதில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். இது போலி நிதி மோசடி ஆகும். அவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று பணம் பறிப்பார்கள். மேலும், இதுபோன்ற மோசடிகள் குறித்து உடனடியாக https://www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 எண்ணை அழைக்கலாம்.
Similar News
News November 11, 2025
கிருஷ்ணகிரி: ஒரு நிமிட அலட்சியம் கூட மரணத்திற்கு காரணமாகலாம்

சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது, உங்கள் முழு கவனமும் வாகனம் ஓட்டுவதில் மட்டுமே இருக்கட்டும். கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள், மெசேஜ் அல்லது அழைப்பில் ஈடுபடாதீர்கள். ஒரு நிமிட அலட்சியம் கூட மரணத்திற்கு காரணமாகலாம். பாதுகாப்பே முதன்மை – விதிகளை பின்பற்றி, கவனமாக வாகனம் ஓட்டுங்கள். உங்கள் குடும்பம் உங்களை நம்பி தான் இருக்கிறது, என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News November 10, 2025
கிருஷ்ணகிரி: இரவு காவலர் ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 10, 2025
கிருஷ்ணகிரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க


