News October 23, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பதிவு

image

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் புகார்களை தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று (22/10/2024) சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்வது மிகவும் குற்றம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News February 2, 2026

கிருஷ்ணகிரி: பாட்டியை அடித்து கொன்ற கொடூர பேரன்!

image

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி (57). இவா் தனது மகன்வழி பேரன் சிரஞ்சீவிக்கு (25) தனது பெயரில் புதிதாக பொக்லைன் எந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்நிலையில் நேற்று சிரஞ்சீவி வண்டிக்கான கடனை கட்டுவதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சிரஞ்சீவி ராணியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரந்தார். இதையடுத்து போலீசார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.

News February 2, 2026

கிருஷ்ணகிரி: சாலையில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

பாகலூர் அடுத்த எ.வி.எஸ் நகரை சேர்ந்த ஆசாரி நாகராஜ் (65). இவர் நேற்று (பிப்.1) மாலை மாலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னே வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் இவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2026

கிருஷ்ணகிரி: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<> இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!