News January 15, 2026
கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் பொங்கல் வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் இன்று (ஜன.15) பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட மக்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உழவர்களின் உழைப்பைப் போற்றும் இந்தத் திருநாளில், மக்கள் அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்திய அவர், பண்டிகையைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் அடித்தே கொலை!

கோனேகானப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முனிமாரப்பா (41). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முனிகிருஷ்ணப்பாவுக்கும் இடையே வழிபாதை தொடர்பாக தகராறு இருந்தது. இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணப்பா கடந்த 21-ந் தேதி முனிமாரப்பாவை கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முனிகிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.
News January 26, 2026
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி காவலர்கள் பட்டியல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 25.1.26 இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு அவசர உதவிக்கு அலைபேசி எண்கள் மற்றும் காவலர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏதாவது பொதுமக்களுக்கு உதவி ஏற்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க