News October 21, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.21) 42.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், பர்கூரில் அதிகபட்சமாக 18மி.மீ மழையும், போச்சம்பள்ளி 7.4 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கே.ஆர்.பி அணை 7 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் இன்று பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாய் பெய்யும் என்று எதிரிபார்க்கப்டுகிறது.
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (26.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.
News January 26, 2026
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
*மற்றவர்களுக்கு உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*
News January 26, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் மதிப்புகள், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, மக்கள் சேவை ஆகியவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


