News September 15, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் செப்.16,17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News September 15, 2025
கிருஷ்ணகிரி: விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செல்போனில் அதிக நேரம் பேசியதாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், புது மணப்பெண் பூஜா (20) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பூஜா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 15, 2025
கிருஷ்ணகிரியில் புதிய நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக சிரஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் பொறுப்பேற்க உள்ளார். இந்த நியமனம் நக்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. அவரது சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News September 15, 2025
கிருஷ்ணகிரி: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை கிருஷ்ணகிரி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <