News August 9, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) 198.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பம்பர் டேமில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நெடுங்கல் 34.00 மி.மீ, ஊத்தங்கரை 28.0 மி.மீ, போச்சம்பள்ளி 21.80 மி.மீ, மற்றும் பர்கூரில் 21.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
Similar News
News August 10, 2025
கிருஷ்ணகிரி: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் <
News August 10, 2025
கிருஷ்ணகிரி கிரிக்கெட் ரசிகர்கள் குஷி!

பெங்களூரை விட ஓசூருக்கு அருகில் கர்நாடகாவின் புதிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளதால் தமிழக ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 1650 கோடி ரூபாயில் பொம்மசந்திராவில் கட்டப்படும் இந்த மைதானம் 80000 பேர் அமரக்கூடியது. ஓசூரில் இருந்து வெறும் 19 கிமீ தூரம் என்பதால் தமிழ்நாட்டிலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் பெங்களூரில் இருந்து 25 கிமீ, விமான நிலையத்திலிருந்து 80 கிமீ தூரம் உள்ளது.
News August 10, 2025
கிருஷ்ணகிரியில் விமான நிலையம் அமையும் இடம் மாற்றம்?

ஓசூர், சூளகிரியை தவிர்த்து பர்கூர்-போச்சம்பள்ளி தாலுகாவிற்கு இடையே புதிய விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். கர்நாடகாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ சுற்றளவிற்கு வேறு விமான நிலையம் அமைக்கக்கூடாது. ஆனால் ஓசூர்,75 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் ஓசூரில் விமான நிலையம் வந்தால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். உங்கள் கருத்தை பதிவு செய்து மறக்காம ஷேர் பண்ணுங்க