News October 24, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை அளவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை பிற்பகல் வரை ஒசூர், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு இடங்களில் மழை பொழிவு காணப்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி மழையளவு விவரம் (மி.மீ) போச்சம்பள்ளி 42 மி.மீ, தளி 40 மி.மீ, பாரூர் 21.8 மி.மீ, கெலவரப்பள்ளி அணை 12 மி.மீ, பெணுகொண்டாபுரம் 11.2 மி.மீ, நெடுங்கல், ஒசூரில் தலா 2 மி.மீ., கிருஷ்ணகிரி 1 மி.மீ. மழை பதிவானது.

Similar News

News January 25, 2026

மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; 3 பேர் தலைமறைவு!

image

உத்தனப்பள்ளி அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (69). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் இடையே நேற்று (ஜன.24) நிலப்பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் சரஸ்வதி, லக்‌ஷ்மணன், மதுகுமார் ஆகியோர் தாக்கியதில் படுகாயயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

News January 25, 2026

கிருஷ்ணகிரி: தொழிலாளி மரணம்; தொடரும் மர்மம்!

image

போச்சம்பள்ளியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40). இவர் தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

ஓசூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

image

ஓசூர் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜன.26) குடியரசு தினம் கொண்டாடுவதை ஒட்டி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ஸ்ரீதரன் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும், ஜூஜூவாடி உள்ளிட்ட மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையைப் பலப்படுத்திச் சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!