News October 18, 2024
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
கேஆர்பி அனையின் நீர்மட்டம் விவரம்

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் மொத்த ஆழம் 52 அடியாக உள்ள நிலையில், இன்று (ஜூலை 9) அதன் நீர்மட்டம் 50.95 அடியாகப் பதிவாகியுள்ளது. அணைக்கு 204 கனஅடி நீர்வரத்து வந்துள்ள உள்ள நிலையில், 204 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் சீராக இருப்பதால், இது விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? 2/2

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.
நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News July 9, 2025
கிருஷ்ணகிரியில் அரசு வேலை 1/2

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கிருஷ்ணகிரியில் மட்டும் 33 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04343-236189)தொடர்பு கொள்ளவும். SHARE IT <<17001950>>தொடர்ச்சி<<>>