News November 26, 2025

கிருஷ்ணகிரி: மலை அடிவாரத்தில் பெண் மர்மமரணம்!

image

பாகூர் அருகே மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை பணி முடிந்து வெளியே செல்வதாக சொல்லி சென்றுள்ளார், நெடுநேரம் ஆனா பின்னும் அவர் திரும்பாத நிலையில் அவரை தேடி வந்தனர். அப்போது மலையின் அடிவாரத்தில் கோவிந்தம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார், போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 1, 2025

கிருஷ்ணகிரி: மூதாட்டியை தாக்கி 4 கிராம் தங்க கம்மல் கொள்ளை!

image

பெரிய தளிப்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி முத்தம்மாள் (55). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத நபர் முத்தம்மாளை தாக்கி காதில் இருந்தருந்த 4 கிராம் கம்மலை பறித்துக்கொண்டு தளிப்பட்டி ஏரியில் குதித்தார். நாகரம்பட்டி போலீசார் ஏரியில் இருந்த அவரை பிடித்து கைது விசாரணையில். அவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அன்பரசு என்பது தெரியவந்தது.

News December 1, 2025

கிருஷ்ணகிரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

News December 1, 2025

கிருஷ்ணகிரி: லாரியின் கிரெய்ன் விழுந்ததால் ஒருவர் பலி!

image

கிருஷ்ணகிரி-குப்பம் ரோட்டில் டாரஸ் லாரி கிரெய்ன் ஒன்றை, நேற்று (நவ.30) ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் கந்திகுப்பம் அருகில் உள்ள காளி கோயில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது வளைவில் மிகவேகமாக வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது, கிரைன் பெல்ட் அறுந்து கிரைன் கீழே சரிந்து விழுந்தது. இதில் அருகில் சென்ற ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!