News December 28, 2025
கிருஷ்ணகிரி: மனைவி மீதான சந்தேகத்தில் கணவன் விபரீத செயல்!

ஊத்தங்கரை அருகே, தனது மனைவிக்கு பிரபு என்பவருடன் தொடர்பு இருப்பதாக சிவகுமார் (39) சந்தேகித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த 21-ஆம் தேதி பிரபுவின் வீட்டிற்குச் சென்ற சிவகுமார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்திற்குத் தீ வைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரைக் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News January 31, 2026
கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

காவேரிப்பட்டிணத்தை சேர்ந்தவர் பசுபதி. இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தென்பண்ணை ஆற்றின் அருகே இவர் தனது தாய் மங்கம்மாளுடன் சேர்ந்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை ஆற்றில் மூழ்கடிக்க முயன்றுள்ளார். அப்பகுதி மக்கள் இருவரையும் தடுத்து குழந்தையை மீட்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 31, 2026
பெண் திடிர் மரணம், போலீசார் விசாரனை

ராணிபேட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவி 43, இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஜன-29 திடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
கிருஷ்ணகிரி: மது பழக்கத்தால் பறிபோன உயிர்!

நல்லூர் அடுத்த பெரிய எலசகிரியை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் (45). இவருக்கு தொடர் மதுபழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) மாலை வந்த வெங்கடேஷை அவரது மகன் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


