News March 25, 2025
கிருஷ்ணகிரி மக்களே கண்டிப்பா இத பண்ணிடுங்க!

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 26, 2025
பர்கூர்:சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி,தேங்காய், கிரானைட் கற்கள் கொண்ட நகரமாகவும் ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும் வருவாய் ஈட்டி வரும்தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வரும் பர்கூர் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதால் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சித்துறை அமைச்சா் அமைச்சர் நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
News March 26, 2025
கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கில் உனிசெட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ரூபா மற்றும் கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோர் கொலை செய்த வழக்கில் இருவருக்கும் நீதிபதி சந்தோஷ் ஆயுள் தண்டனையும் தலா நான்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் கோவை மற்றும் சேலம் சிறையில் அடைத்தனர்.
News March 25, 2025
குழந்தை வரம் அருளும் சந்திரசூடேஸ்வரர்

ஓசூர் நகரின் மைய பகுதியில் தேர்பேட்டை எனும் இடத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்களுக்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க