News January 12, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜன.21ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஒகேனக்கல் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஓசூர் மாநகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாது எனக் கூறியுள்ளார்.
Similar News
News August 18, 2025
விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகள்

விநாயகா் சிலையை அமைக்க விரும்புவோர் முன்கூட்டியே துணை ஆட்சியா் (அ) கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சிலை வைக்க நில உரிமையாளா்கள் இடம் ஒப்புதல் பெறவேண்டும். விநாயகா் சிலையமைக்கும் கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்காத பொருள்களால், தனி நுழைவு, வெளியேறும் வசதியுடன், முதலுதவி, தீத்தடுப்பு கருவிகள், சிசிடிவி மற்றும் ஜெனரேட்டா் போன்றவை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News August 18, 2025
கிருஷ்ணகிரி: ரூ.93,000 சம்பளத்தில் வங்கி வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மின்நகர், பத்தளப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..!