News January 22, 2026

கிருஷ்ணகிரி: போதையில் கணவன் அட்டூழியம்!

image

ராயக்கோட்டை அடுத்த திம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி முருகன் (40), ரமணி (35). இந்நிலையில் தொடர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் நேற்று (ஜன.21) இரவு மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். மேலும் பணம் தாராத மகள் மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து ரமணி அளித்த புகாரின் பேரில் இன்று (ஜன.22) காலை போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 26, 2026

கிருஷ்ணகிரி: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

கிருஷ்ணகிரி MLA மதியழகன் குடியரசு தின வாழ்த்து

image

குடியரசு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மதியழகன் இன்று (ஜன.26) பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒற்றுமை, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News January 26, 2026

கிருஷ்ணகிரி: இலவச சேவைக்கு இனி ஒரு message போதும்!

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!