News January 1, 2026
கிருஷ்ணகிரி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <
Similar News
News January 10, 2026
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அருகே உள்ள கூர்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி மண்ணம்மாள்(70). இவர், கூர்சம்பட்டியில் இருந்து பெருமாள்(55) என்பவரின் மொபட்டில் மத்தூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க சென்றார். பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய போது, மொபட்டில் இருந்து தவறி விழுந்த மண்ணம்மாள் படுகாயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் பலனின்றி உயிரிழந்தார்.
News January 10, 2026
ஓசூரில் இன்று சிறப்பு மருத்துவ சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” திட்டத்தின் கீழ், மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஓசூர் வட்டம் குமுதேபள்ளி மித்திராலயா பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், கண், பல், சித்தா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.