News September 2, 2025
கிருஷ்ணகிரி பாலம் எப்போது திறப்பு?: எம்.பி. அறிவிப்பு.

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை, கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டப் பொறியாளர் ரமேஷ் நேற்று(செப்.01) ஆய்வு செய்தனர். பாலத்தில் 2 ‘பேரிங்குகள்’ பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்துப் பணிகளும் முடிந்து வியாழன் முதல் பாலம் போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் என்று எம்.பி. கோபிநாத் தெரிவித்தார்.
Similar News
News September 3, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்
▶️ பள்ள சூளகரை, மத்தூர்
▶️ சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை
▶️ இராயக்கோட்டை, கெலமங்கலம்
▶️ நாச்சிக்குப்பம், வேப்பனபள்ளி
▶️ கம்மம்பள்ளி, கிருஷ்ணகிரி
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்
News September 3, 2025
இரவு ரோந்து பணியில் போலீஸ் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
ஒசூர் அருகே புதிய விமான நிலையம்: பணிகள் தொடக்கம்.

ஓசூர் அருகே, பேரிகை-பாகலூர் இடையே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று (செப்.2) அறிவித்தார். வான்வெளியின் தடையற்ற மேற்பரப்பு (OLS) ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே இந்த இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.