News October 22, 2025
கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி: திருப்பத்துாரிலிருந்து பர்கூர் செல்லும் ‘பி6’ டவுன் பஸ் நேற்று (அக்.21) பர்கூர் நோக்கி வந்தது. பேருந்து பர்கூர் வந்ததும், அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது மதுபோதையில் இருந்த அபிஷேக், யஷ்வந்த் ஆகிய இளைஞர்கள் இறங்க மறுத்து நடத்துனரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடத்துனர் அளித்த புகாரின் பெயரில் போதை ஆசாமிகள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News January 29, 2026
ஓசூரில் சரமாரி தாக்குதல்; சிதறிய பேருந்து கண்ணாடி!

ஓசூர் பேருந்து நிலையத்தில் நேற்று (ஜன.29) தருமபுரியைச் சேர்ந்த வேலுசாமி (34) காணாமல் போன தன் பையை தொலைத்துள்ளார். இதை தேட அனுமதி மறுத்த கர்நாடக ஓட்டுநர் ஆனந்தாவுடன் வேலுசாமி தகராறில் ஈடுபட்டார். இதில் வேலுசாமி பேருந்தின் கண்ணாடியை உடைத்தார். இது குறித்து ஓட்டுநர் ஆனந்தா அளித்த புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதற்காக ஓசூர் நகர போலீஸார் நேற்று (ஜன.28) வேலுசாமியை கைது செய்தனர்.
News January 29, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன. 30ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடைபெறும் இம்முகாமில் 10, 12-ஆம் வகுப்பு, பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் பங்கேற்கலாம்.
News January 29, 2026
கிருஷ்ணகிரி: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

கிருஷ்ணகிரி மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. முதல் பட்டதாரி சான்றிதழ்
4. கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5. விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7. குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <


