News January 14, 2026
கிருஷ்ணகிரி: பசு மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
கிருஷ்ணகிரி: குடியால் பறிபோன உயிர்!

தருமபுரியை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் (39). இவர் ஓசூரில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு தொடர் குடி பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) அக்ரஹாரம் பகுதியில் நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

கிருஷ்ணகிரி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 30, 2026
கிருஷ்ணகிரியில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<


