News January 22, 2026
கிருஷ்ணகிரி பகுதிகளில் கிராம சபை கூட்டம்

தமிழகத்தில் வரும் ஜன-26 குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கூட்டங்களை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தவும், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
திருநங்கையர்களுக்கு ரூ.1 லட்சம் விருது: விண்ணப்பிக்க அழைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி மாநில விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்த விருதுக்குத் தகுதியுள்ளவர்கள், பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, அதன் நகலை கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News January 22, 2026
கிருஷ்ணகிரியில் நாளை கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.23) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதன்படி கிருஷ்ணகிரி நகரம், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு, கலெக்டர் அலுவலகம், ஓல்ட்பேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கதேரி, ஆலப்பட்டி, சூலக்குண்டா ஆகிய பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
News January 22, 2026
கிருஷ்ணகிரி: பரிசுகள் வழங்கி பாராட்டிய ஆட்சியர்

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் நேற்று (ஜன.21) கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இதில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


