News October 22, 2025
கிருஷ்ணகிரி: நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்

ஊத்தங்கரையிலிருந்து டாட்டா ஏசி வாகனம் இன்று (அக் 21) அனுமந்திருத்தம் சென்றது.வாகனம் வெப்பாலம்பட்டி அருகே செல்லும் பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயலுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் காயமடைந்த ஓட்டுனரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04343 – 232830 தெரிவியுங்க. SHARE IT!
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷணகிரிக்குட்பட்ட மின் நிலையங்களில் நாளை (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடச முத்திரம், தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், ஜெகதேவி, சத்தலட் பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் தறிகெட்டு ஓடிய கார்; 6 பேர் படுகாயம்!

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரதீபா (24) என்பவர் விஜயவாடாவை சேர்ந்த அபிஷேக்குடன் ( 23) காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரை அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகே இருந்த இறைச்சி கடையில் போய் சொருகியது. இதில் இறைச்சி வாங்க வந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


