News June 27, 2024
கிருஷ்ணகிரி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அனைத்திந்திய இளைஞர் மன்றம், இந்திய தேசிய மாதர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இ.கம்யூ. நகர செயலாளர் உபேத் தலைமை தாங்கினார்.
Similar News
News October 16, 2025
கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு இடமா!

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி அருகே மல்லச்சந்திரம் மோரல்பாறையின் மீது கற்திட்டைகள் உள்ளன. இவை இறந்தவர்களின் நினைவாக சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். இவை 1மீ முதல் 2.6மீ வரை உயரம் கொண்டதாக உள்ளது. இவற்றில் சில ஓவிங்களும் காணப்படுகின்றன. நம்ம ஊரில் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கும் தெரியவில்லை. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News October 16, 2025
கிருஷ்ணகிரி: உங்க ஆதார் கார்டை வேறுயாராவது யூஸ் பண்றாங்களா?

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்
News October 16, 2025
கிருஷ்ணகிரி: G Pay / PhonePe / Paytm பயனாளர்கள் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!