News October 19, 2025

கிருஷ்ணகிரி நிலம் வாங்க போறிங்களா?

image

நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும். அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும். பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். பட்டாவுடன் ஆதார் இணைக்க, <>இணையதளத்தில்<<>> சென்று, ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் தேவையான விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம். ஷேர்

Similar News

News October 21, 2025

கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு உதவிதொகை அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறிவழிகாட்டு மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் புதுப்பித்தும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.200 முதல் ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பட்டியல்/பழங்குடியினருக்கு இருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் வரும் நவ-28ஆம் தேதிக்குள் மாவட்ட மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை <>இங்கு <<>>அறியலாம்

News October 21, 2025

கிருஷ்ணகிரியில் 400 பேர் பலி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜனவரி முதல் அக்டோபர் 12 வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் சம்பவ இடத்திலும், சிகிச்சையிலும் சேர்த்து 400 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ல் 753 ஆக இருந்த உயிரிழப்பு 2024ல் 683 ஆக குறைந்தது. நடப்பாண்டில் இறப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் போலீசார் கருதுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும் அறிவுரை வழங்கப்படுகிறது.

News October 21, 2025

கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி

image

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ)தலைசிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சைக்குத்துதல் போன்ற பயிற்சிகளை அளிக்கபட வுள்ளன. 8th முதல் 12th வரை தேர்ச்சி பெற்ற 18 வயதிலிருந்து 35 வரையிலானவர்கள், www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!