News March 21, 2024

கிருஷ்ணகிரி: நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

image

கிருஷ்ணகிரி, தேன்கனிகோட்டை அடுத்த பிலிமுத்திரை கிராம பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனிராஜ் என்ற வாலிபர் அவருக்கு சொந்தமான நர்சரி தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை இட்டு அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி முனிராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News

News September 5, 2025

கிருஷ்ணகிரி பெண்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (6379860065) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் உழவர் சந்தை விலை விவரம்

image

கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் (செப். 05) விலை பட்டியல் இதன்படி, 1கிலோ தக்காளி ரூ.16, உருளை ரூ.24, வெங்காயம் ரூ.35, மிளகாய் ரூ.45, கத்திரி ரூ.22, வெண்டைக்காய் ரூ.20, முருங்கை ரூ.35, பீர்க்கங்காய் ரூ.22, சுரைக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.20, பாகற்காய் ரூ.26, தேங்காய் ரூ.58, முள்ளங்கி ரூ.12, பீன்ஸ் ரூ.45, அவரை ரூ.35, கேரட் ரூ.70, கீரை ஒரு கட்டு ரூ.10, கொத்தமல்லி ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.

News September 5, 2025

கிருஷ்னகிரி: ரூ.1,50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கிருஷ்னகிரி: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த லங்கில்<<>> சென்று பார்த்துக்கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் .

error: Content is protected !!