News January 30, 2026
கிருஷ்ணகிரி: தீ விபத்தில் துடி துடித்து பலி!

நாகரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (73). இவர் கடந்த ஜனவரி 22-ம் தேதி தோட்டத்தில் குப்பைகளுக்கு தீ வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது தீ பரவியது. இதில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

கிருஷ்னகிரியில், வாடகைக்கு குடியேற்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை குறித்து (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 31, 2026
கிருஷ்ணகிரி: சாலையில் பறிபோன உயிர்!

வேப்பனப்பள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிசாமி, சந்திரன். இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னே வந்த லாரி மோதி பைக் விபத்துக்குளானது. இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

காவேரிப்பட்டிணத்தை சேர்ந்தவர் பசுபதி. இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தென்பண்ணை ஆற்றின் அருகே இவர் தனது தாய் மங்கம்மாளுடன் சேர்ந்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை ஆற்றில் மூழ்கடிக்க முயன்றுள்ளார். அப்பகுதி மக்கள் இருவரையும் தடுத்து குழந்தையை மீட்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


