News May 9, 2024
கிருஷ்ணகிரி: திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கண்ணன்டஹள்ளி நான்கு ரோட்டில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் எம்எல்ஏ தே. மதியழகன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, இளநீர், மோர், நுங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
Similar News
News January 28, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது வருகிறது. இதன்படி பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் தருவதாகக் கூறி வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த சைபர் நிதி மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News January 28, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் டைட்டன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
News January 28, 2026
கிருஷ்ணகிரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டத்தின் கீழ், தகுதியான பெண்கள் பயனடைய மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நாளை (ஜன.29) நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாலுகா வாரியாக முகாம்கள் நடைபெற உள்ளனர். இதில் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், முதியோர் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு அரசு நலத்திட்ட சேவைகளைப் பெறலாம்.


