News March 27, 2024
கிருஷ்ணகிரி: தலைவிரித்தாடும் சைபர் மோசடி

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகேயுள்ள மேலுமலையைச் சேர்ந்தவர் கவிசந்துரு(27), தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், இவரது செல்போனுக்கு குறைந்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்மநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதை நம்பிய கவிசந்துரு அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹19,30,860-ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 9, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 09/04/2025 ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 9, 2025
கிருஷ்ணகிரி கால பைரவர் கோயில்

கிருஷ்ணகிரி, கல்லுக்குறிக்கியில் புகழ் பெற்ற கால பைரவர் கோயில் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் இங்கு கால பைரவர் இரண்டு சிலைகளாக உள்ளார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 9, 2025
கிருஷ்ணகிரி: மொபைல் போன் சர்வீஸ் இலவச பயிற்சி

கே.ஆர்.பி அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 30 நாட்கள் மொபைல்போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்க உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் 15க்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், மேலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.