News April 21, 2024

கிருஷ்ணகிரி: டிராக்டர் மோதி மாணவன் உயிரிழப்பு

image

போச்சம்பள்ளியை அருகே உள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் கணபதி(13), அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சாணாங்கொல்லை பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது வழியாக வந்த டிராக்டர் மாணவன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணபதியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கணபதி பரிதாபமாக உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 14, 2026

கிருஷ்ணகிரி:காவலருக்கு குவியும் பாராட்டு..!!

image

சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் பிப்-13ல் தனியார் தொழிற்சாலை மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன.
இவற்றை காவலர் ஒருவர் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் பலரும் அந்த காவலருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.!

News February 14, 2026

கிருஷ்ணகிரியில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் !

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டக் குறைதீர்க்கும் முகாம் இன்று (பிப்.14) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 8 வட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் இம்முகாம் நடைபெறும். இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற திருத்தங்களைச் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பு.

News February 14, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர காவல் அதிகாரிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (13.02.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!