News October 1, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

image

இந்திய ரயில்வேயில் செக்‌ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவை இவர்களின் முதன்மையான வேலை. *நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

Similar News

News October 15, 2025

கிருஷ்ணகிரியில் அக். 17-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக். 14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 14, 2025

ஓசூரில் குழந்தைகள் காப்பகம் முதல்வர் திறந்து வைத்தார்

image

தமிழக தொழில் துறை சார்பில் ஓசூரில் தொழில் பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தை, தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (அக்.14) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொழில் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க இந்த காப்பகம் பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!