News August 5, 2025

கிருஷ்ணகிரி சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 6, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.6) ஓசூர் மாநகராட்சியில் பாலாஜி நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி, கிருஷ்ணகிரி நகராட்சியில் பாத்திமா சமுதாய கூடம், மத்தூரில் சிவம்பட்டி சமுதாய கூடம், ஊத்தங்கரையில் கல்லாவி சாலை ஸ்ரீவெங்கடேஸ்வரா மஹால், கெலம்பங்கலம் வட்டாரத்தில் தொட்டமேட்ரை VPRC கட்டடம், தளி வட்டாரத்தில் பெலகொண்டப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.

News August 6, 2025

e-NAM ஏலத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வை.!

image

இன்று 05/08/2025., போச்சம்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் e-NAM (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் நேரில் கலந்துரையாடினார். விவசாயிகளின் தேவைகள், சந்தை நிலைமைகள் குறித்து கேட்டறிந்து, சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News August 5, 2025

குழந்தைகள் மீது குற்றம்? உடனே 1098-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.!

image

கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி மக்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு குற்றச் செயல் களுக்கும் புகார் செய்ய, 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று(ஆக.5) அறிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!