News December 31, 2025
கிருஷ்ணகிரி: சாலையில் இளைஞர் துடி துடித்து மரணம்!

பெரியகுத்தி அருகே நாகமலை கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்ற இளைஞர் நேற்று (டிச – 30) மாலை 7 மணிக்கு தங்கைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தங்கையை மருத்துவமனையில் விட்டு விட்டு நாகமலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது சின்னகுத்தி அருகே சாலையில் எதிரே வந்த பிக்கப் வாகனத்தில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
Similar News
News January 5, 2026
கிருஷ்ணகிரி: இன்றே பண்ணலனா கை நழுவும்!

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 5, 2026
கிருஷ்ணகிரியில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், மத்திகிரி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் ஜன.6ஆம் தேதியும் தண்டரை, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஜன.8 ஆம் தேதியும் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்தடை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை அமலில் இருக்கும். ஷேர் பண்ணுங்க.
News January 5, 2026
கிருஷ்ணகிரியில் மீன்பாசி குத்தகைக்கு இ-டெண்டர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகளில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை வழங்க இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in இணையதளத்தில் விவரங்கள் பெறலாம். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்கும் கடைசி நேரம் 05.01.2026 காலை 9 மணி. மேலும் விவரங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.


