News September 9, 2025
கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
▶️ பிளாஸ்டிக் தரம்
▶️ கேன்களின் சுத்தம்
▶️ உற்பத்தி மற்றும் காலாவதி தேதி
▶️ BIS மற்றும் FSSAI முத்திரைகள்
ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News September 9, 2025
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

மாவட்டங்கள் தோறும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டி நடைபெற்று கொண்டு வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டி கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்டிஏடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.
News September 9, 2025
கிருஷ்ணகிரியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணி

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தரவுள்ளார். முதல்வர் வருகையொட்டி போலீசார் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட, 8 மாவட்டங்களிலிருந்து, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.
News September 9, 2025
BREAKING: கிருஷ்ணகிரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், நவ.1 கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.