News October 29, 2025
கிருஷ்ணகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1. கூட்டு பட்டா
2. விற்பனை சான்றிதழ்
3. நில வரைபடம்
4. சொத்து வரி ரசீது
5. மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News October 29, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

கிருஷ்ணகிரி மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள்<
News October 29, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (28.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
கிருஷ்ணகிரி: நுகர்வோர் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: எரிவாயு உருளைகள் பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான அக்டோபர் 2025 நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வரும் வியாழக்கிழமை (அக்.31) மாலை 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.


