News September 24, 2025
கிருஷ்ணகிரி: குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி!

2025 குரூப் 1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம். பயிற்சி மற்றும் விடுதி வசதி பற்றிய தகவல்களை www.tahdco.com என்ற இணையதளத்தில் அறியலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 24, 2025
ஸ்டாலினுக்கு “வரலாற்று கதிரவன்” பட்டம் வழங்க தீர்மானம்

கிருஷ்ணகிரி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு “வரலாற்று கதிரவன்” என்ற பட்டம் வழங்கப்பட வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில், வட்டாரத் தலைவர் உட்பட பல பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு, இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
News September 24, 2025
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் வரும் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 26 அன்று, விவசாயிகளின் குறைகளைக் கேட்கவும், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் S. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற முந்தைய கூட்டத்தில், 207 விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
News September 24, 2025
கிருஷ்ணகிரி: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த நீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!