News December 14, 2025
கிருஷ்ணகிரி: கிணற்றில் விழுந்து இளம் பெண் பலி!

கிருஷ்ணகிரி, அருகேநரசிபுரம் கிராமத்தில் வசித்து வரும் லோகேஷ் என்பவரின் மகள், பலவனபள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று (டிச-13) மதியம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளார். இதில் சுமார் 15அடி ஆழமுள்ள குளத்தின் அருகே சென்றபோது கால் தவறி குளத்தில் விழுந்தது தெரியவந்து. பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
Similar News
News December 27, 2025
கிருஷ்ணகிரி வாக்காளர்கள் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதற்காக 2025 டிசம்பர் 27, 28 மற்றும் 2026 ஜனவரி 3, 4 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். புதிய வாக்காளர் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News December 27, 2025
கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி பரிதாப பலி!

திருவண்ணாமலை சாலையைச் சேர்ந்தவர் சபரீசன். இவருடைய மகள் தனுஸ்ரீ(17). இவர் கேரள மாநிலம், பாலக்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி தந்தையுடன் பைக்கில் சென்ற அவர், சப்பாணிப்பட்டி அருகே சென்றபோது சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்த தனுஸ்ரீ சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சபரீசன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 27, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை (டிச-27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


