News May 20, 2024
கிருஷ்ணகிரி: கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு

ஊத்தங்கரை உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்ற கல்லாவி புதூர் புங்கனை சென்னகேசவன், சிங்காரப்பேட்டை குப்பநத்தம் ஆறுமுகம், மத்தூர் அடுத்த பெருமனூர் பூபாலன், கிருஷ்ணமூர்த்தி, சாமல்பட்டி குன்னத்தூர் மணிமேகலை உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 10, 2026
நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் பலி

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. மனோகரன் கண்காணிப்பில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் பணியில் இருப்பர். அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கலாம்.