News May 7, 2025
கிருஷ்ணகிரி கம்பவுண்டருக்கு நேர்ந்த சோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் கம்பவுண்டர் வெங்கடேசன்(59). கடந்த, ஏப்ரல் 27, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
Similar News
News October 29, 2025
‘சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்’ – கிருஷ்ணகிரி ஆட்சியர்!

கிருஷ்ணகிரி: ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வருவாயை உயர்த்தியும், செலவுகளை குறைத்தும் வாழ வேண்டும் என்னும் திருவள்ளுவரின் கூற்றை மேற்கோள்காட்டி உலக சிக்கன நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
கிருஷ்ணகிரி: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நவம்பர் 2025 முதல் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 18-வயதிற்குட்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனை அறை எண்-7, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையதிலும், 18-வயதிற்க்கு மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் நடைபெறும். என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.


