News November 6, 2025
கிருஷ்ணகிரி: கனமழை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில் இன்று (நவ.06) தற்போது திடீரென வானிலை மாறியது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், 7,697 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News February 10, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது விபத்துகளின் போது தலைக்கு ஏற்படும் கடுமையான காயங்களைத் தடுக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. “தலையை அல்ல, ஹெல்மெட்டை காயப்படுத்துங்கள்” என்ற வாசகத்துடன் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
News February 10, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு !

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்ட (KRP) அணையின் நீர்மட்டம் இன்று (பிப்.8) 49.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 295 கனஅடி நீர் வரத்து கிடைக்க, 179 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது 1,363 எம்.சி.அடி நீர் சேமிப்பு இருப்பதால், விவசாயம் மற்றும் பிராந்திய குடிநீர் தேவைக்கு நிலையான நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
News February 10, 2026
கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

சிலேப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (38) 2020-ல் மின்சாரம் தாக்கி இறந்தார். அதே ஆண்டு அவரது மனைவி ஜமுனா, 2 குழந்தைகள் சாலை விபத்தில் பலியாகினர். ஜமுனாவின் தம்பி கார்த்திக் (35) அக்கா- மைத்துனரின் விபத்து காப்பீடுகளுக்கு உரிமை கோரினார். முருகேசனின் தந்தை வெங்கடப்பா தனக்கு தருமாறு மனு அளித்தால் கார்த்திக், அவரை வெட்டி கொன்றார். இவ்வழக்கில் கார்த்திக்குக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.


