News February 1, 2026
கிருஷ்ணகிரி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
Similar News
News February 5, 2026
கிருஷ்ணகிரியில் உதவியவருக்கு அடி உதை!

மிட்டப்பள்ளியை சேர்ந்த பலராமன் என்பவர் நேற்று (பிப்.3) மாலை ஊத்தங்கரை சாலையில் மது போதையில் விழுந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஜலபதி பலராமனை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பலராமனனின் மகன்கள் திலிப் (21), தீபன் (23), அஜித் (25) ஆகியோர் ஜலபதியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 5, 2026
கிருஷ்ணகிரி: தூக்கி வீசப்பட்டு இருவர் பலி!

தேன்கனிக்கோட்டை அருகே பெரியதோகரையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரகள் ராமாச்சாரி (36), முனிராஜ் (37). கடந்த பிப்.3-ம் தேதி இரவு இருவரும் பைக்கில் தேன்கனிக்கோட்டையில் இருந்து தளி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரம் நின்ற லாரி மீது பைக் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேன்கனிக்கோட்டை போலீசார் லாரி டிரைவர் உபேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
News February 5, 2026
கிருஷ்ணகிரி: கழுத்தை நெரித்து கொன்ற கொடூர மனைவி!

ஒசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த தம்பதி பார்த்திபன் (32), அம்சவள்ளி (26). கடந்த பிப்.3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அம்சவள்ளி தனது இளைய மகனின் கண்முன்னே கணவரைக் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கணவன் தற்கொலை செய்ததாக நாடகமாடினார். உடம்பில் தற்கொலைக்கான காயம் இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதில் அம்சவள்ளி கணவரை கொன்றது தெரிய வந்தது.


