News August 30, 2025
கிருஷ்ணகிரி ஓட்டல்களில் உணவு சரியில்லையா?

கிருஷ்ணகிரி மக்களே, ஓட்டல்களில் தரமற்ற/சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. உணவில் பழைய இறைச்சியை பயன்படுத்தினாலோ, உணவில் கலப்படம் செய்தலோ, ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் சமைத்தாலோ, பழைய காய்கறி/எண்ணெயை பயன்படுத்தினாலோ நீங்கள் இந்த எண்ணில் (9444042322) புகார் செய்யலாம். இதில் ஓட்டலுக்கு 1-10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 30, 2025
BREAKING: கிருஷ்ணகிரி போலீஸ் அதிரடி

காவேரிப்பட்டினம் அருகே மோட்டூர் கிராமத்தில் கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி பரிகாரம் செய்ய வேண்டுமென நாடகமாடி, பச்சிளம் குழந்தையை கடத்திய விஜயசாந்தி என்பவரை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் முரளி குழந்தையை தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தார். தனக்கு பிறந்த குழந்தை இறந்ததால் கடத்தியதாக விஜயசாந்தி போலீசிடம் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
கிருஷ்ணகிரி: நண்பர்களின் அலப்பறையால் நின்ற திருமணம்

கிருஷ்ணகிரி அருகே குடித்து விட்டு நண்பர்கள் செய்த அலப்பறையால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆக.26 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகனின் நண்பர்கள் குடித்து மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், மாப்பிள்ளையின் நண்பர்கள் விட்டபாடில்லை. இதனால் கோபமான மணப்பெண், மாப்பிள்ளையையே வேண்டாம் என திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
News August 30, 2025
கிருஷ்ணகிரி: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை-APPLY NOW!

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்., 17-க்குள்<